5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 بعثه مقام معظم رهبری در گپ بعثه مقام معظم رهبری در سروش بعثه مقام معظم رهبری در بله
5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012 5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012

5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012

ஹஜ் இஸ்லாமிய உம்மாஹ்வின் ஐக்கியம், வலிமை என்பவற்றைக் காண்பிக்கிறது: இமாம் காமெனயி அரசியல் குழு: இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கிய செய்தியில், ஹஜ் கிரியைகள், ஐக்கியம், புரிந்துணர்வு மற்றும் சிறப்புகள் என்பவற்றைக் க

ஹஜ் இஸ்லாமிய உம்மாஹ்வின் ஐக்கியம், வலிமை என்பவற்றைக் காண்பிக்கிறது: இமாம் காமெனயி
அரசியல் குழு: இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கிய செய்தியில், ஹஜ் கிரியைகள், ஐக்கியம், புரிந்துணர்வு மற்றும் சிறப்புகள் என்பவற்றைக் காண்பிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
செய்தியின் ஒரு பகுதி பின்வருமாறு:
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
 
எல்லாப் புகழும் அகில உலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் சாந்தியும் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் உத்தமத் தோழர்கள் மீதும் உண்டாவதாக.
 
இறையன்பு மற்றும் ஆசீர்வாதம் என்பவற்றைக் கொண்ட புனித ஹஜ் பருவ காலம், இம்மாபெரும் வழிபாட்டில் பிரசன்னமாகியிருக்கும் பெரும் பேறைப் பெற்றோருக்கு தெய்வீக அருளின் அன்பளிப்புகளை வழங்க மீண்டுமொரு முறை எம்மிடம் வந்துள்ளது. இங்கே, ஹஜ் யாத்திரிகர்களாகிய நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் நேரம் ஆகிய இரண்டும் ஆன்மீகக் கல்வியும் இலௌகீக உணர்வும் கொண்டவையாகும். இங்கே, நேர்மை மற்றும் இரட்சிப்பு என்பவற்றுக்காக விடுக்கப்பட்ட பரிசுத்த அழைப்புக்கு முஸ்லிமான ஆண்களும் பெண்களும் தமது உள்ளங்கள் மற்றும் நாவுகள் என்பவற்றுடன் சாதகமாக பதிலளிக்க முன்வந்துள்ளனர். இங்கே, ஒவ்வொருவரும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் தாழ்மை என்பவற்றின் பாடங்களைக் கற்கும் வாய்ப்பைக் காண்கின்றனர். இது போதனைக்கும் பயிற்றுவிப்புக்குமான மிகச் சிறந்த முகாமாகும். இஸ்லாமிய உம்மாஹ்வின் ஐக்கியம், வலிமை, மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை இது காட்சிப்படுத்துவதுடன், ஷைத்தானுக்கும் தவறான சிந்தனைகளுக்கும் எதிராகப் போராடுவதற்கான யுத்தகளமாகவும் இது அமைகின்றது. அறிவும் ஆற்றலும் மிக்க இறைவன், விசுவாசிகள் தமது சுய ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாக இதனை அமைத்துள்ளான். அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவதற்கான விருப்பத்தை அழைப்பு மற்றும் அறிவு என்பவற்றின் கண்களினால் நாம் காண வேண்டுமா? இந்த சுவன வாக்குறுதி எமது முழு மனிதாத்மாக்களையும் தழுவிக் கொள்ளும்.
 
ஹஜ் கிரியைகள், உலக இருப்புக்கும் மறுமை வாழ்வுக்கும் இடையிலான தொடர்புடைமையையும் தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒன்றிணைவையும் முக்கியத்துவப்படுத்துகின்றன. உடல்களும் உள்ளங்களும் சுற்றிக் கொண்டிருக்கும் அசைக்கவியலாத எல்லையற்ற நிலையமான தெளிவும் மாட்சிமையும் பொருந்திய புனித கஃபா, தொடர்ச்சியான மற்றும் ஒழுங்குமுறையான முயற்சி, மூலத்திற்கும் முடிவுக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் நாட்டம், அரபா மற்றும் மஷ்அர் என்பவற்றின் உயிர்ப்பான துறைகளை நோக்கிய இடம்பெயர்வு, உள்ளங்களை செழுமைப்படுத்தும் படியான இம்மாபெரும் ஒன்றுகூடலினால் உருவாகும் கட்டுக்கடங்கா உணர்ச்சி, ஷைத்தானின் குறியீடுகளை தாக்குவதற்கான கூட்டுப் பிரயத்தனம், இந்தக் குறியீட்டுக் கிரியைகளினூடாக வௌ;வேறு ஸ்தலங்கள், நிறங்கள், இனங்கள் என்பவற்றைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், வழிகாட்டல்களை அர்த்தமுள்ளதாக்குதல் - இவையே இப்புனித மிகு வழிபாட்டின் முக்கிய பண்புகளாகும்.
 
இறைநினைவின் பால் உள்ளங்களை உந்தித்தள்ளுகின்ற, விசுவாசம் மற்றும் அறம் என்பவற்றினால் மனித உள்ளங்களைப் பிரகாசிக்கச் செய்கின்ற, சுயநலத்திலிருந்தும் இஸ்லாமிய உம்மாஹ்வின் பல்வேறு சிரமங்கள் மற்றும் தாக்கங்களிலிருந்தும் தனிநபர்களை விடுவிக்கின்ற இச்சிறப்பு மிகு கிரியைகள் தீமைகளின் விஷ அம்புகளிலிருந்து ஆன்மாவைப் பாதுகாத்து, பாவச்செயல்களுக்குப் பலியாகாத உறுதியான பலத்தை அவ்வான்மாக்களுக்கு வழங்குகின்றன.
 
இஸ்லாமிய உம்மாஹ்வின் மிகப் பரந்த வியாபகத்தை ஹஜ் யாத்திரிகர்கள் தமது கண்களால் காண்பார்கள். அதன் திறன் மற்றும் ஆற்றல்களை உணர்வார்கள். மேலும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் கண்டு கொள்வார்கள். உற்சாகமான ஒரு பங்களிப்பை இச்சமுதாயத்திற்கு வழங்குவதற்கு தயாரான நிலையை அவர்கள் தம்முள் உணர்வார்கள். இறைத்தூதருக்கான தமது விசுவாசத்தை செழுமைப்படுத்திக் கொள்வார்கள். இஸ்லாத்தின் மீதான தமது பற்றையும் நம்பிக்கைகையும் வலுப்படுத்திக் கொள்வார்கள். மேலும், உம்மாஹ்வின் சுயமறுசீரமைப்புக்காகவும், இஸ்லாமியக் கருத்தியல்கள் மற்றும் குறிக்கோள்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான வலுவான தீர்மானமொன்றையும் உருவாக்கிக் கொள்வார்கள்.
 
உம்மாஹ்வின் மறுசீரமைப்பு மற்றும் சுய மறுசீரமைப்பு ஆகிய இவ்விரு அம்சங்களும் இடையறாத இரு கடமைகளாகும். சமய நம்பிக்கைகளை ஆழமாகக் கற்க விருப்பம் கொண்டு விரிவான அறிவுடன் செயற்படுவோர் இவ்வம்சங்களைக் கண்டுகொள்வதில் எவ்வித சிரமங்களையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
 
ஒருவரின் சுய மறுசீரமைப்பானது ஷைத்தானிய இச்சைகளுடன் போராடுவது, மற்றும் பாவச் செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முயற்சிப்பது என்பவற்றிலிருந்து ஆரம்பமாகும். உம்மாஹ்வின் மறுசீரமைப்பானது எதிரிகளை இனங்காணுதல், அவர்களது செயற்றிட்டங்களைப் புரிந்து கொள்தல் மற்றும் அவர்களது சதிகளை முறியடிக்கப் போராடுதல் என்பவற்றிலிருந்து ஆரம்பமாகும். தனி முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய தேசங்கள் என்பவற்றின் உள்ளங்கள், கைகள் மற்றும் நாவுகள் என்பவற்றை ஒன்றிணைப்பதன் மீது இது கட்டியெழுப்பப்படுகின்றது.
 
இவ்வேளையில், இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான விடயங்களுள் ஒன்று குறிப்பாக இஸ்லாமிய உம்மாஹ்வின் விதியுடன் தொடர்புடைய அம்சங்களுள் ஒன்று, வட ஆபிரிக்கா மற்றும் அதன் பிராந்தியங்களில் இடம்பெற்று வரும் புரட்சி நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகள், பல்வேறு ஊழல் மிக்க சர்வாதிகார அரசுகளினதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்புடையதும் சியோனிசத்துடன் தொடர்புடையதுமான அரசுகளினதும் வீழ்ச்சிக்குக் காரணமாகியுள்ளன. இச்சாதகமான வாய்ப்பை, தமதும் தமது உம்மத்தினதும் மறுசீரமைப்புக்காக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் அது இஸ்லாமிய உம்மாஹ்வுக்குப் பெரும் இழப்பாக அமையும். மூர்க்கத்தனமான போக்குடைய வல்லாதிக்க சக்திகள் இந்த இஸ்லாமிய எழுச்சியைத் துடைத்தெறிவதற்கு தம்மாலான அனைத்து வழிகளிலும் முயன்று வருகின்றன.
 
இம்மாபெரும் எழுச்சிகளினால், மோசமான வன்முறைகளையும் குற்றச் செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற ஆட்சியாளர்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கொடுங்கோன்மைக்கு எதிராக முஸ்லிம் ஆண்களும் பெண்களும் எழுச்சி பெற்றுள்ளனர். வாழ்வுக்கும் மரணத்துக்குமான இப்போராட்டத்தில், ஒரு மீட்பரையும் விடுதலைக்கான போதனைகள் மற்றும் கருத்துகளையும் அவர்கள் இஸ்லாத்தில் கண்டுள்ளனர். மேலும் இது வெளிப்படையான குரல் எனவும் அவர்கள் பிரகடனம் செய்;;துள்ளனர். அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ள பலஸ்தீன தேசத்தைப் பாதுகாத்தல், சர்வாதிகார ஆட்சிகளுக்கெதிராகப் போராடுதல் என்பன எழுச்சியாளர்களின் பிரதான கோஷங்களாக இப்போது வலுப்பெற்றுள்ளன. அவர்கள் ஏனைய முஸ்லிம் தேசங்களுடன் நட்புக்கரம் நீட்டி முஸ்லிம் உம்மாஹ்வின் ஐக்கியத்திற்கு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.
 
சகோதரர்களே! சகோதரிகளே! ஹஜ் பருவ காலம் என்பது இஸ்லாமிய உலகின் சமகால விவகாரங்கள் தொடர்பாக அறியவும் கருத்துகளைப் பரிமாறவும் ஏதுவான காலமாகும்.
 
ஐயமின்றி, இறைவனின் நேர்வழியும் உதவியும் சமாதானத்தின் பாதையில், விசுவாசிகளின் பாதுகாப்புக்கான வழியிலேயே பிரயோகிக்கப்படும்.
 
அல்குர்ஆன் கூறுகின்றது: 'எமது பாதையில் முயற்சிப்போருக்கு நாம் நேர்வழியைக் காண்பிப்போம்'. (29:69)
 
அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
 
செய்யித் அலி காமெனயி
 
5 துல்ஹஜ் 1433 , 21 அக்டோபர் 2012
 
 
 
 


| شناسه مطلب: 11444







نظرات کاربران